
இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556க்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து அணி மிக அதிரடியாக விளையாடி வருகிறது.
உணவு இடைவேளை வரை 130 ஓவர்கள் முடிவில் 658/3 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 259 ரன்கள், ஹாரி புரூக் 218 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
பாகிஸ்தானுக்கு எதிராக அதிக இங்கிலாந்தின் அதிகபட்ச டெஸ்ட் ரன்கள் இதுவேயாகும். இதற்கு முன்பு 2022இல் பாக். எதிராக இங்கிலாந்து 657 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் அதிகமான இரட்டைச் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் இணைந்துள்ளார்.
வெளிநாட்டில் டான் பிராட்மேட் அதிகமான (5) இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார். இவர்களுடன் வாலி ஹாம்மோட், பிரையன் லாரா, குமார் சங்ககாரா, யூனிஸ் கானும் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்கள்.
4 இரட்டைச் சதங்களுடன் கிரீம் ஸ்மித்துடன் ஜோ ரூட் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.