மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இலங்கை தொடர்: நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்!

இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

மிட்சல் சான்ட்னருடன் கிளென் பிலிப்ஸ் - படம் |ஐசிசி

Updated On :23 அக்டோபர் 2024, 5:23 am

இலங்கை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு மிட்சல் சான்ட்னர் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நிரந்தர கேப்டனாக தொடருவாரா என்பது பின்னர் உறுதிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்தாண்டு தொடக்கத்தில் தனது பதவியில் இருந்து விலகினார்.

நாதன் ஸ்மித், விக்கெட் கீப்பர் மிட்ச் ஹே ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இளம்வயது கேப்டனான மிட்சல் சான்ட்னர் தலைமை தாங்வது நல்ல முடிவாக இருக்கும் என்று நியூசிலாந்து தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியில் இருக்கும் 6 வீரர்கள் இலங்கைக்கு எதிரான தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தேர்வாளர் சாம் வெல்ஸ் கூறும்போது, “2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடக்கமாக இருக்கும். மேலும், 2027 ஆம் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை மீதும் ஒரு கண் வைத்திருக்கிறோம். அதை கருத்தில் கொண்டு அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி வருகிற நவம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், அதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகின்றன.

நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணி

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், சாக் ஃபோல்க்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் ஃபிலிப்ஸ், க்ளென் ஃபிலிப்ஸ் ஸ்மித், இஷ் சோதி, வில் யங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.