பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா?
இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் தொடரில் நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது. மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரன் எடுக்க வேகமாக ஓடியபோது, பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது.
காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகினார். அவருக்கு ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் அணியில் இடம்பெற்று விளையாடுவார என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த வாரத்தில் பென் ஸ்டோக்ஸுக்கு மீண்டும் ஸ்கேன் செய்யப்பட உள்ளது.
ஆலி போப் கேப்டன்
காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகினார். இதனையடுத்து, ஆலி போப் அணியை கேப்டனாக வழிநடத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன்பாக பென் ஸ்டோக்ஸ் முழுமையாக காயத்திலிருந்து குணமடையாத பட்சத்தில், அணியை மீண்டும் ஆலி போப் கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் விளையாடுவாரா?

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

பென் ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணியை நினைத்துப் பார்க்க முடியவில்லை: ஜோஃப்ரா ஆர்ச்சர்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



