12 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ்..! காத்திருக்கும் ஐபிஎல்!
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பிபிஎல் தொடரில் இணைந்தது குறித்து...

பிபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ். - படம்: எக்ஸ் / அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்
முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (35 வயது) பிபிஎல் தொடரில் இணைந்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தத் தொடரில் விளையாடுகிறார்.
கடந்த ஜூன் 28ஆம் தேதி பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். தொடர் தோல்விகள் அவரை இந்த முடிவுக்கு தள்ளியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் 5 லட்ச ஆஸ்திரேலிய டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.39 கோடி) வாங்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2014-15 பிபிஎல் சீசனில் மெல்பர்ன் ரெனேகேட்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடியுள்ளார். 32 சராசரியுடன் 128 ரன்கள் எடுத்திருந்தார். அதில் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்திருந்தார். பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும் எடுத்திருந்தார்.
தற்போது, பிபிஎல் போட்டிகள் வரும் டிச.12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால் பிபிஎல் அறிமுக போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடலில் நடைபெற இருப்பது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நேரடியாக பார்க்க நல்ல வாய்ப்பாக அமையும்.
அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி தனது முதல் போட்டியில் சிட்னி தண்டர் அணியை டிச.16ல் எதிர்கொள்கிறது. முழு சீசனிலும் விளையாடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்காக அவர் கிளப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது, சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றதால், ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Stoked.
— Adelaide Strikers (@StrikersBBL) September 1, 2026
The Adelaide Strikers are thrilled to announce the signing of one of cricket's greatest all-rounders, Ben Stokes, ahead of BBL|16.
Details â https://t.co/a18wsyxP5y pic.twitter.com/SozHIsrdTw
Summary
Ben Stokes returns to BBL, joins Adelaide Strikers for entire season
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







