மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ககிசோ ரபாடா விளையாடுவாரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Kagiso Rabada

ககிசோ ரபாடா - படம் | AP

Published On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டு அணியில் இணைந்த வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முதல் டெஸ்ட்டில் ரபாடா விளையாடுவது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஷ்வெல் பிரின்ஸ் பேசியதாவது: ககிசோ ரபாடா நன்றாக பந்துவீசுகிறார். அவர் அடுத்த சில நாள்கள் பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளார். அவர் நன்றாக பந்துவீசுகிறார். ஆனால், போட்டியில் விளையாடும் அளவுக்கு 100 சதவிகிதம் முழு உடல்தகுதியுடன் இல்லை. அவர் தொடர்ந்து அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடுவார். அவர் எப்போது போட்டியில் களமிறக்கப்படுவார் என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ரபாடா பிளேயிங் லெவனில் இடம்பெறுவது அணியின் பலத்தை அதிகரிக்கும். தற்போது அணியில் கார்பின் பாஷ், ஜெரால்டு கோட்ஸீ, மார்கோ யான்சென், ஆன்ரிச் நார்ட்ஜே மற்றும் டேன் பேட்டர்சன் வேகப் பந்துவீச்சு தெரிவுகளாகவும், சிமோன் ஹார்மர், கேசவ் மகாராஜ் மற்றும் செனுரான் முத்துசாமி சுழற்பந்துவீச்சு தெரிவுகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Doubts have arisen over whether South African fast bowler Kagiso Rabada will play in the first Test against Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.