மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

மெக்ஸ்வீனி சதம்: இந்தியா ஏ அணிக்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஸி. ஏ!

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையேயான முதல் ஒருநாள் போட்டி குறித்து...

Australia's Nathan McSweeney watches the ball in the air during the U19 World Cup cricket final match between India and Australia at Bay Oval in Mount Maunganui on February 3, 2018. (Photo by Marty MELVILLE / AFP)

நாதன் மெக்ஸ்வீனி (கோப்புப் படம்) - AFP

Published On :

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையேயான முதல் ஒருநாள் போட்டி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸி. ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ 48.2 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக நாதன் மெக்ஸ்வீனி 123 ரன்கள் குவித்து அசத்தினார்.

தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது நாதன் மெக்ஸ்வீனி - கேப்டன் வில் சதல்ர்லேண்டு ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினார்கள்.

இந்த இணையினர் 228 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இதில் கேப்டன் வில் சதல்ர்லேண்டு அதிரடியாக விளையாடி 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பொறுமையாக விளையாடிய மெக்ஸ்வீனி 135 பந்துகளில் 123 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தியா சார்பில் சூர்யான்ஷ் ஷெட்கே 4, யஷ் தாக்குர் 3, அர்ஷத் கான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த இலக்கை சேஸ் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் டி20யில் இன்றிரவு மோதவிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Nathan McSweeney century makes australia A fighting total against India A

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.