ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

முதல் டெஸ்ட்: இலங்கை 202 ரன்கள் முன்னிலை!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

News image
- படம் | AP
Updated On :20 செப்டம்பர் 2024, 1:52 pm

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (செப்டம்பர் 18) காலேவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இலங்கை (305/10)

இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 305 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 50 ரன்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வில்லியம் ஓ’ரூர்கி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஜாஸ் படேல் மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்து (340/10)

நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 340 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 70 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து, டேரில் மிட்செல் அதிகபட்சமாக 57 ரன்களும், கேன் வில்லியம்சன் 55 ரன்களும் குவித்தனர்.

இலங்கை அணியின் தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும், தனஞ்ஜெயா டி சில்வா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

202 ரன்கள் முன்னிலை

நியூசிலாந்தைக் காட்டிலும் 35 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்துள்ளது. திமுத் கருணாரத்னே 83 ரன்களும், தினேஷ் சண்டிமால் 61 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 34 ரன்களுடனும், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.