இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது குறித்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு இந்திய அணியும், சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.
மேக்ஸ்வெல் கூறுவதென்ன?
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொருத்தே அமையும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஜடேஜா, அஸ்வின்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீண்ட காலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விளையாடியுள்ளோம். அவர்களுக்கு எதிராக நாங்கள் எவ்வாறு விளையாடுகிறோம் என்பது போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக இருந்துள்ளது. அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினால், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் அவர்கள் இருவருக்கு எதிராகவும் அதிகம் விளையாடியுள்ளேன். எங்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்.
ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக கடந்த 2013 ஆம் ஆண்டு விளையாடியபோது, ஒவ்வொரு நாளும் அவருக்கு எதிராக வலைப்பயிற்சியில் பேட் செய்வேன். அவரை இளம் வீரராக இருந்ததிலிருந்து பார்த்து வருகிறேன். தற்போது அவர் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார் என்றார்.
டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் 330 இன்னிங்ஸ்களில் விளையாடி கூட்டாக 821 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதில் 50 ஐந்து விக்கெட்டுகள் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் ஆகிறாரா அஸ்வின்?

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்ன? கேப்டன் பதில்!

முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த கேப்டன்கள் வரிசையில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



