இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகுகிறாரா?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகுகிறாரா?
படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆலி ஸ்டோன் விலக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடர் நிறைவடைந்தவுடன் இந்த டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஆலி ஸ்டோன் விலகுகிறாரா?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆலி ஸ்டோனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆலி ஸ்டோன் அந்த அணிக்காக இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் முக்கியப் பந்துவீச்சாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்து வீரர் ஆலி ஸ்டோனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகு, அவரது காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது உறுதியானது. இந்தவார இறுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதால், அவரால் அடுத்த 14 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு 14 வாரங்கள் ஓய்வு தேவைப்படும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆலி ஸ்டோன் விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com