3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஹாரி ப்ரூக் படைத்துள்ளார்.
Harry Brook celebrates after scoring a century
சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஹாரி ப்ரூக்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஹாரி ப்ரூக் படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று (ஆகஸ்ட் 3) இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

கைவசம் விக்கெட்டுகள் மீதமிருக்க இங்கிலாந்தின் வெற்றிக்கு மிகவும் குறைவான ரன்களே தேவைப்படுகின்றன. இங்கிலாந்து தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸாக் கிராலி 14 ரன்கள், பென் டக்கெட் 54 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ஆலி போப் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

3-வது அதிவேக சதம்

கேப்டன் ஆலி போப் ஆட்டமிழந்த பிறகு, ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் 91 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பாக, ஜேமி ஸ்மித் 80 பந்துகளிலும், பென் டக்கெட் 88 பந்துகளிலும் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது 3-வது இடத்தை ஹாரி ப்ரூக் பிடித்துள்ளார்.

ஹாரி ப்ரூக்குடன் மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட்டும் சதத்தினை நெருங்கி வருகிறார்.

அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் 98 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Harry Brook has become the third Englishman to score the fastest century in Tests against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com