இந்தியாவுக்கு எதிரான கடைசிப் போட்டி மிகுந்த சவாலாக இருக்கும்: தென்னாப்பிரிக்க வீரர்

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மிகுந்த சவாலானதாக இருக்கும் என தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான கடைசிப் போட்டி மிகுந்த சவாலாக இருக்கும்: தென்னாப்பிரிக்க வீரர்
படம் | AP
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மிகுந்த சவாலானதாக இருக்கும் என தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளதால், தொடரானது 1-1 என சமனில் உள்ளது.

இந்த நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மிகுந்த சவாலானதாக இருக்கும் என தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிகவும் வலிமையான அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த உள்ளோம். கடைசி ஒருநாள் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அணி இருக்கும். தொடரைக் கைப்பற்ற கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டு அணிகளும் இருப்பதால், இந்தப் போட்டி மிகவும் சவாலானதாக இருக்கப் போகிறது. தென்னாப்பிரிக்க அணி சமபலத்துடன் உள்ளது.

கடந்த போட்டியில் வெற்றி பெற்றதைப் போன்று கடைசிப் போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 5) விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

Summary

South African batsman Matthew Breetzke has said that the final ODI against India will be very challenging.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com