ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா

இந்திய அணியின் வெற்றிக்காக ரன்கள் குவிப்பது மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா
படம் | ஹார்திக் பாண்டியா (எக்ஸ்)
Published on
Updated on
2 min read

இந்திய அணியின் வெற்றிக்காக ரன்கள் குவிப்பது மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று (ஜனவரி 31) புணேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அவர்கள் இருவரும் அரைசதம் விளாசியது இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது.

ரசிகர்கள்தான் என்னுடைய சொத்து

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற நிலையில், பேட்டிங் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: பேட்டிங் எப்போதும் என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அதனை நான் மிகவும் நேசிக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்தது மிகுந்த திருப்தியளித்தது. இந்த நாள் மிகவும் திருப்திகரமான நாளாக அமைந்தது.

படம் | ஹார்திக் பாண்டியா (எக்ஸ்)

நான் கிரிக்கெட்டை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன். அது என்னுடைய வாழ்க்கை. அதற்கு நான் எப்போதும் முன்னுரிமை அளிப்பேன். அதுவே என்னுடைய முதல் காதல். இந்த விளையாட்டு எனக்கு நிறைய அன்பினைக் கொடுத்துள்ளது. இந்த விளையாட்டுக்கு மிகவும் நேர்மையாகவும், விஸ்வாசமாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.

நான் எப்போதும் ரசிகர்களுக்காகவே விளையாடுகிறேன். ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உற்சாகமளிக்கும்போது, அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது. அதே நேரத்தில், ரசிகர்களுக்காகவும் நான் சிறப்பாக விளையாட வேண்டும் எனவும் நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு நிறைய விஷயங்கள் மாறிவிட்டது. ரசிகர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மதிப்புமிக்கதாக இருக்க, சிறப்பாக விளையாடி அவர்களை மகிழ்விக்க விரும்புகிறேன் என்றார்.

நேற்றையப் போட்டியில் ஹார்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.