இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டபிள்யூபிஎல்: குஜராத் அணி கேப்டனாக ஆஸி. வீராங்கனை தேர்வு!

டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டனாக ஆஸி. வீராங்கனை தேர்வாகியுள்ளார்.

News image
ஆஸி. வீராங்கனைகள்- படம்: எக்ஸ் / ஆஷ்லி கார்ட்னர்
Updated On :5 பிப்ரவரி 2025, 10:51 am

DIN

டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டனாக ஆஸி. வீராங்கனை ஆஷ்லி கார்ட்னர் தேர்வாகியுள்ளார்.

27 வயதாகும் ஆஷ்லி கார்ட்னர் ஆஸி. ஆல்-ரவுண்டராக இருக்கிறார். இதற்கு முன்பு ஆஸி.யின் பெத் மூனி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தவிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபிள்யூபிஎல் தொடர் 2023 முதல் நடைபெற்று வருகிறது. முதல் கோப்பையை மும்பையும் 2ஆவது ஆண்டு கோப்பையை ஆர்சிபி அணியும் வென்றது.

ஆடவர் ஐபிஎல் தொடரில் 17 வருடமாக ஆர்சிபி கோப்பையை வெல்லாதது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு டபிள்யூபிஎல் போட்டிகள் பிப்.14ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. முதல் போட்டியில் ஆர்சிபியுடன் குஜராத் அணி சின்னசாமி திடலில் மோதுகின்றன.

கடந்த 2 முறையும் குஜராத் அணி 5ஆவது இடத்தைப் பிடித்தது. ஆஷ்லி கார்ட்னர் 2017இல் அறிமுகமானார். 95 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1,400 ரன்கள் 78 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

ஆஸி. மகளிர் கிரிக்கெட்டில் உயரிய விருதான பெலிண்டா க்ளார்க் விருது பெற்றுள்ளார். 2022 காமன்வெல்த் தொடரில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

டபிள்யூபிஎல் தொடரில் ஆஷ்லி கார்ட்னர் 324 ரன்கள், 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.