
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷெல்டன் ஜாக்சன் ஓய்வை அறிவித்துள்ளார்.
15 வருடங்களாக விளையாடிவரும் சௌராஷ்டிரா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷெல்டன் ஜாக்சன் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
ரஞ்சி டிராபியின் காலிறுதியில் சௌராஷ்டிரா அணி குஜராத்திடம் தோல்வியடைந்தது. இதன் மூலம் அவர் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான ஜாக்சன், 105 முதல்தரப் போட்டிகளில் 7200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 186 ரன்கள் விளாசியுள்ளார். இவர் 21 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடித்துள்ளார்.
ஜாக்சன் ஒரு பன்முகத் திறமைகொண்ட கிரிக்கெட் வீரராகவும், சிறந்த பீல்டராகவும் இருந்துள்ளார். சௌராஷ்டிரா அணிக்காக விக்கெட் கீப்பராகவும் இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
2012-13 ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் அவர் 4 அரைசதங்கள் மற்றும் 3 சதங்களை அடித்தார். இதில் கர்நாடகம் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான காலிறுதி மற்றும் அரையிறுதியில் தொடர்ச்சியாக சதங்கள் விளாசினார். இதன் மூலம் சவுராஷ்டிரா அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற உதவியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.