மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

இந்தியா 3-0*..! கடைசி ஒருநாள் போட்டியிலும் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக வென்றது இந்தியா.

News image

இந்திய அணியினர்...

Updated On :12 பிப்ரவரி 2025, 9:54 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வென்று அசத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் அதிகபட்சமாக துணைக் கேப்டன் ஷுப்மன் கில் 112 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களிலும், விராட் கோலி 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின்வரிசையில் அதிரடிகாட்டிய விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 29 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் அதிவேகத்தில் இலக்கை விரட்டினர். இதனால், ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் 4 பவுண்டரியுடன் 23 ரன்களும் பென் டக்கெட் 8 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் அறிமுக வீரராக களமிறங்கிய பாண்டன் 2 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 38 ரன்களும் குவித்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 24 ரன்களிலும் கேப்டன் ஜோஸ் பட்லர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பந்து வீச்சாளர் கஸ் அகிட்சன் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். இருப்பினும் அவரால் இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. 19 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 38 ரன்கள் விளாசிய கஸ் அகிட்சன் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

முடிவில் 34.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்திய அணித் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ராணா, ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இவ்விரு அணிகளும் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி இங்கிலாந்தின் ஹெடிங்லே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.