
ஒருநாள் போட்டிகள் திறமைகளின் உச்சம் என ஐசிசி தலைவர் ஜெய் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது.
இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது போட்டி வருகிற 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
பரிசுத் தொகை
8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 8 அணிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளான வெற்றியாளர் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்களும் (ரூ.19.45 கோடி), ரன்னர் அணிக்கு 1.12 மில்லியன் டாலர்களும் (ரூ.9.72 கோடி) வழங்கப்படவிருக்கிறது. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு 560,000 டாலர்கள் (ரூ.4.86 கோடி) வழங்கப்படவுள்ளது. 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பரிசுத் தொகை 53 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதன் மதிப்பு மொத்தமாக 6.9 மில்லியன் டாலர்கள்(ரூ.59.9 கோடி) ஆகும்.
இதையும் படிக்க... சாம்பியன்ஸ் டிராபி: பரிசுத் தொகை விவரம்..!
லீக் சுற்றின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு 34,000 டாலர்கள்(ரூ.29.5 லட்சம்) கிடைக்கும். 5 மற்றும் 6 வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு 3,50,000 (ரூ.3.04 கோடியும்), 7 மற்றும் 8-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 1,40,000 (ரூ.1.21 கோடியும்) கிடைக்கும். மேலும் போட்டியில் பங்கேற்றதற்காக ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் 1,25,000 டாலர்கள் (ரூ.1,21 கோடி) கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய் ஷா
சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஐஐசி தலைவர் ஜெய்ஷா கூறுகையில், “2025 ஆம் ஆண்டு ஆடவருக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை பிரதிபலிக்கிறது. இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாக இருக்கும்.
ஒருநாள் போட்டி திறமைகளின் உச்சத்தை எடுத்துக்காட்டும். இந்தப் பரிசுத் தொகையானது விளையாட்டில் முதலீடு செய்வதற்கும், வருங்காலங்களில் கிரிக்கெட்டின் மதிப்பைக் கூட்டுவதற்கும் ஐசிசியின் தற்போதைய நிலைப்பாட்டை கூறுகிறது” எனத் தெரிவித்தார்.
ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி 20 ஓவர் வடிவில் வருகிற 2027 ஆம் ஆண்டு முதல் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... ரஞ்சி டிராபி அரையிறுதி: மும்பை அணியில் மீண்டும் ஜெய்ஸ்வால்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.