திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

2-வது டெஸ்ட்: இருவர் அரைசதம்; ஜிம்பாப்வே 86 ரன்கள் முன்னிலை!

News image
- படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :3 ஜனவரி 2025, 3:15 pm

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 86 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று (ஜனவரி 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

157 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரஹ்மத் ஷா 19 ரன்களும், அப்துல் மாலிக் மற்றும் ஃபரீத் அகமது தலா 17 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா மற்றும் நியூமேன் நியாம்ஹுரி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முஸராபானி 2 விக்கெட்டுகளையும், நிகராவா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

86 ரன்கள் முன்னிலை

ஆப்கானிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜிம்பாப்வே அணி இரண்டாம் நாளில் அதன் முதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் கிரைக் எர்வின் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சிக்கந்தர் ராஸா 61 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 49 ரன்களும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஹ்மத்ஸாய் 3 விக்கெட்டுகளையும், ஃபரீத் அகமது 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணியைக் காட்டிலும் 86 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.