தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 615 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது.
போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜனவரி 6) பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின்போது, பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷான் மசூத் 137 ரன்களுடனும், சௌத் ஷகீல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 109 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.