தொடரை வெல்லுமா நியூசிலாந்து? இலங்கைக்கு 256 ரன்கள் இலக்கு!
இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியில் 256 ரன்கள் இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.


இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியில் 256 ரன்கள் இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது.
இந்தத் தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி நியூசிலாந்தின் செடான் பார்க் மைதானத்தில் இன்று(ஜன.8) நடைபெற்றது.
டாஸ் போடுவதற்கு முன்னதாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. மேலும் 50 ஓவர் போட்டி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 37 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணித் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் வில் யங் 16 ரன்களில் ஆட்டமிழக்க ரச்சின் ரவீந்திரா - மார்க் சாப்மேன் இருவரும் நல்ல பாட்னர்-ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினர்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 79 ரன்னில் ஆட்டமிழக்க மார்க்கும் 62 ரன்னில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் லேதம் 1 ரன்னிலும், பிலிப்ஸ் 22 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.
கடைசியில் கேப்டன் மிட்சல் சாண்ட்னர் (20 ரன்கள்) மற்றும் டேரில் மிட்சல் (38 ரன்கள்) இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 255 ரன்கள் குவித்தது. இலங்கை அணித் தரப்பில் தீக்ஷனா 4 விக்கெட்டுகளும், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இலங்கை அணி 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...