வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்காவும் புறக்கணிக்கிறதா?

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்கிறதா என்பது தொடர்பாக...

ஆப்கானிஸ்தான் வீரர்கள் - படம் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி வலியுறுத்தியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.

புறக்கணிக்க வலியுறுத்தல்

அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு பெண்களுக்கான விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. அந்த நாட்டின் மகளிர் கிரிக்கெட் அணியையும் தலிபான் அரசு கலைத்துவிட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி தெரிவித்துள்ளதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா விளையாட வேண்டுமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கில்லை. இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இந்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் தென்னாப்பிரிக்கா விளையாடாது எனத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.

முன்னதாக, பிரிட்டனைச் சேர்ந்த 160-க்கும் அதிகமான அரசியல்வாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கக் கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.