பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய ஷேன் வாட்சன்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பதவிக்காலம் முடியும் முன்பு விலகியுள்ளார்.
ஷேன் வாட்சன் (கோப்புப்படம்)
ஷேன் வாட்சன் (கோப்புப்படம்)படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பதவிக்காலம் முடியும் முன்பு விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். தற்போது, அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு மீதமிருக்கும் நிலையில் அவர் அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

பயிற்சியாளர் பதவியிலிருந்து ஷேன் வாட்சன் விலகியதை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் உரிமையாளர் நதீம் ஓமர் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் 10-வது சீசனில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஷேன் வாட்சன் விலகுகிறார். அவரது எதிர்கால பயணத்துக்கு எங்களது வாழ்த்துகள் என்றார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மற்றும் பாகிஸ்தான் தேசிய அணியிலிருந்து பயிற்சியாளர்கள் அவர்களது பதவிக்காலம் முடிவடையும் முன்பு விலகுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இவ்வாறு நடந்திருக்கிறது.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி நிர்வாகத்துக்கும், அந்த அணியின் பயிற்சியாளர் ஷேன் வாட்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஷேன் வாட்சன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கேரி கிரிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி அவர்களது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பதவிக்காலம் முடியும் முன்பே விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.