காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ஃபார்முக்குத் திரும்ப வேண்டுமா? உள்ளூர் போட்டிகளில் விளையாடுங்கள்: யுவராஜ் சிங்

வீரர்கள் ஃபார்முக்குத் திரும்ப உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் (கோப்புப் படம்) - படம் | யுவராஜ் சிங் (எக்ஸ்)

Published On :16 ஜனவரி 2025, 6:27 pm IST

வீரர்கள் ஃபார்முக்குத் திரும்ப உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததையடுத்து, அணியின் மூத்த வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் உள்ளூர் போட்டிகளில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

ஃபார்முக்குத் திரும்ப வேண்டுமா?

மூத்த வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்திய அணியில் உள்ள நட்சத்திர வீரர்களாக இருந்தாலும், சரியாக விளையாடவில்லையென்றால் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் இடம்பெற்று விளையாடி மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)

ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)

இது தொடர்பாக பிரபலங்களுக்கான சிசிஎல் கிரிக்கெட் தொடக்க விழாவில் கலந்துகொண்ட யுவராஜ் சிங் பேசியதாவது: உள்ளூர் போட்டிகள் மிகவும் முக்கியம். வீரர் ஒருவருக்கு நேரம் இருக்கிறது, அவர் போட்டிகளில் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்கத் தவறுகிறார் என்றால், கண்டிப்பாக அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது மிகச் சிறந்த பயிற்சியாக இருக்கும் என்றார்.

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களான ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் தங்களது அணிகளுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மும்பை அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது தொடர்பாகவோ அல்லது எந்தவொரு பயிற்சி மேற்கொள்வது தொடர்பாகவோ விராட் கோலி தரப்பிலிருந்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் எனப் பலரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.