குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

டி20 போட்டிகளில் இந்திய அணி வியூகத்தை மாற்ற வேண்டும்: தலைமைப் பயிற்சியாளர்

டி20 வடிவிலான போட்டிகளில் இந்திய மகளிரணி அதன் வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பதாக தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெரிவித்துள்ளார்.

News image

இந்திய மகளிரணி வீராங்கனைகள் - படம் | பிசிசிஐ

Updated On :29 ஜூன் 2026, 5:30 pm IST

டி20 வடிவிலான போட்டிகளில் இந்திய மகளிரணி அதன் வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பதாக தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாழ்வா சாவா போட்டியில் நேற்று (ஜூன் 28) விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில், டி20 வடிவிலான போட்டிகளில் இந்திய மகளிரணி அதன் வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பதாக தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 வடிவிலான போட்டிகளில் நாங்கள் உண்மையில் எங்களது வியூகத்தில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. நாங்கள் எந்த மாதிரியான காம்பினேஷனுடன் களமிறங்கப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் எங்களிடம் முன்னேற்றம் தேவைப்படுவதைக் கண்டறிய முடிந்தது. பேட்டிங்கிலும் நாங்கள் அதிரடியாக விளையாட வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 15 அல்லது 20 ரன்கள் அதிகமாக எடுத்திருக்கலாம் என்றார்.

Summary

Head coach Amol Muzumdar has stated that the Indian women's team needs to change its strategy in T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.