சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடத்தப்படுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. ரோஹித் சர்மா கேப்டனாகவும், இளம் வீரர் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: ஐசிசி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!
முற்போக்கு சிந்தனையுடன் கூடிய முடிவு
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது இந்திய அணி நிர்வாகத்தின் முற்போக்கு சிந்தனையுடன் கூடிய முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அஸ்வின் பேசியதாவது: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலிருந்து யாரை துணைக் கேப்டனாக நியமிக்க கருத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது சரியா? அல்லது தவறா? என்பது குறித்து நான் பேசவில்லை. ஆனால், ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது நல்ல முடிவு. கடந்த தொடரின்போதும், அவர் இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
நான் தவறாக கூறுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருப்பதாக நான் நம்புகிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது இந்திய அணி நிர்வாகத்தின் முற்போக்கு சிந்தனையுடன் கூடிய முடிவு. எதிர்காலத்தில் ஷுப்மன் கில் அணியை வழிநடத்த துணைக் கேப்டன் பொறுப்பு உதவியாக இருக்கலாம் என அணி நிர்வாகம் நினைத்திருக்கலாம் என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

அழுத்தத்தை இப்படிதான் கையாள்கிறேன்; ரகசியம் பகிர்ந்த ஷுப்மன் கில்!

ஆட்டத்தின் பாதியில் பெவிலியன் திரும்பிய ஷுப்மன் கில்; காரணம் என்ன?







