இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 23) அறிவித்துள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 23) அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கும் இடையில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி வருகிற ஜனவரி 30 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 23) அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அலிஸா ஹேலி கேப்டனாக வழிநடத்துகிறார். அலிஸா ஹேலிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும், டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் அவர் குணமடைந்து அணிக்குத் திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்
அலிஸா ஹேலி (கேப்டன்), தஹிலா மெக்ராத், டார்ஸி பிரௌன், ஆஷ்லே கார்டனர், கிம் கார்த், அலானா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்டு, பெத் மூனி, எல்லிஸ் பெரி, மேகன் சூட், அன்னாபெல் சதர்லேண்ட், ஜியார்ஜியா, ஜியார்ஜியா வேர்ஹம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...