முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

கொல்கத்தா பனிப்புகையை குற்றம்சாட்டிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்!

கொல்கத்தாவின் பனிப்புகையினால் சரியாக ஆட முடியவில்லையென இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் குற்றச்சாட்டு.

News image

ஹாரி புரூக் - படம்: ஏபி

Updated On :25 ஜனவரி 2025, 12:21 pm IST

கொல்கத்தாவின் பனிப்புகையினால் சரியாக விளையாட முடியவில்லையென இங்கிலாந்து துணை கேப்டன் ஹாரி புரூக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜன.22இல் தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

2ஆவது டி20 சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு (ஜன.25) நடைபெறவிருக்கிறது

இந்த நிலையில் ஹாரி புரூக் கொல்கத்தாவின் பனிப்புகையினால் சுழல்பந்துகளை ஆட முடியவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹாரி புரூக் 14 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். வருண் சக்கரவர்த்தி (3/23) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஹாரி புரூக் கூறியதாவது:

பனிப்புகைதான் காரணம்

நான் பிஷ்னோயை விளையாடவில்லை. ஆனால், வருண் சக்கரவர்த்தி தலைசிறந்த பந்துவீச்சாளர். அவரது பந்தினை கணிக்க முடியவில்லை. அநேகமாக அன்றைய இரவு பனிப்புகையினால் பந்தினை சரியாக பார்க்க முடியவில்லை என நினைக்கிறேன். சென்னையில் பந்து நன்றாக தெரியும். அதனால் இங்கு பந்தினை பார்ப்பது சற்று எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.

வருண் சக்கரவர்த்தி அற்புதமான வீரர். பல திறமைகளுடன் துல்லியமாக பந்து வீசுகிறார். இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்கள் மீது சென்னையில் அழுத்தத்தை அளிப்போம் என நம்புகிறேன் என்றார்.

இதேபோல் இதற்கு முன்பும்...

இதேபோல் இதற்கு முன்பு 1992-93இல் டெட் டெக்ஸ்டர் முதல் டெஸ்ட் தோல்விக்கு பனிப்புகையை காரணம் கூறியிருந்தார். 2017ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற இந்தியா-இலங்கை போட்டியில் சில வீரர்கள் வாந்தி எடுத்ததால் போட்டி கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.