நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரஞ்சி கோப்பை: கட்டுப்பாட்டை மீறி விராட் கோலியின் காலைத் தொட்ட ரசிகர்!

ரஞ்சி கோப்பை போட்டியில் விராட் கோலியின் காலைத் தொட்டு கும்பிட்ட ரசிகரின் விடியோ வைரலாகி வருகிறது.

News image

கட்டுப்பாட்டை மீறி விராட் கோலியின் காலைத் தொட்ட ரசிகர் - படங்கள்: எக்ஸ் / வினய் விகே18

Updated On :30 ஜனவரி 2025, 1:05 pm IST

ரஞ்சி கோப்பை போட்டியில் விராட் கோலியின் காலைத் தொட்டு கும்பிட்ட ரசிகரின் விடியோ வைரலாகி வருகிறது.

ரயில்வேஸ் அணிக்கு எதிராக இன்று (ஜன.30) தில்லி அணி ரஞி கோப்பையில் விளையாடி வருகிறது.

12 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுகிறார். கடைசியாக அவர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காஸியாபாத்தில் நடந்த உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார்.

விராட்கோலி விளையாடவிருப்பதால் நார்த் எண்ட், ஓல்ட் கிளப் ஹவுஸ் ஸ்டாண்ட் பகுதிகள் பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன.

கோலியின் காலில் விழுந்த ரசிகர்

ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த விராட் கோலியிடம் ஓடிவந்த ரசிகர் திடீரென காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்டார்.

டாஸ் வென்ற தில்லி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்துவரும் ரயில்வேஸ் அணி 30 ஓவர் முடிவில் 94/5 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இந்தப் போட்டியில் கட்டுப்பாடுகளை மீறிய ரசிகர் ஒருவர் கோலியின் காலைத் தொட்டு கும்பிட்டார். பின்னர், அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

இந்த விடியோ இணையத்தில் வைரலானது. காலில் ஏன் விழ வேண்டும்? என இது பல்வேறு விதமான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

மனதை வென்ற விராட் கோலி

ரசிகரின் செயலினால் கோபமடையாத கோலி பொறுமாயாக இருந்தார். அவரை எழுப்பி அமைதியாகக் கூட்டிச்செல்லுமாறு சைகை காண்பிப்பார். விராட் கோலி ரசிகர்கள் கோலியின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

காலை 5 மணி முதலே ரசிகர்கள் வரிசையில் காந்திருந்து போட்டியை பார்க்க ஆவலுடன் வந்திருக்கிறார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய வீரர்கள் யாரும் சரியாக சோபிக்காததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினர். இதனால், வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து கோலி விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.