விராட் கோலியைக் காணக் குவிந்த ரசிகர்களால் தில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானம் நிரம்பி வழிந்தது.
ரஞ்சி டிராபிக்கான தில்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் விளையாடும் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் திடலில் நடைபெற்றுவருகிறது.
சர்வதேசப் போட்டிகளில் சரியாக விளையாடாத இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டனர். இதனால், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களும் அவரவர் மாநில அணிகளுக்காக விளையாடினர். முதல் சுற்றில் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விளையாடவில்லை.
Powerful people comes from powerful places âï¸
— Aditya Saha (@Adityakrsaha) January 30, 2025
Powerful people make places Powerful âï¸
This is what Kohli has earned. â¤ï¸ pic.twitter.com/m65Q4GPUqB
இந்த நிலையில், ரயில்வேஸ் அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடுவதாகத் தெரிவித்ததால், டிக்கெட் விற்பனையும் களைகட்டியது. அதுமட்டுமின்றி மைதானத்தில் இருக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டன. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளூர் சிவப்புப் பந்து போட்டிகளில் விராட் கோலி விளையாடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
விராட் கோலியின் வருகையால் 10,000 க்கும் அதிகமான ரசிகர்கல் வருவார்கள் என்று தில்லி கிரிக்கெட் சங்கம் கணித்திருந்தது. ஆனால், டாஸ் தொடங்குவதற்கு முன்பிருந்தே ரசிகர்கள் கூட்டத்தால் அருண் ஜேட்லி மைதானம் நிரம்பி வழிந்தது. ரஞ்சி டிராபியில் முதல் நாள் போட்டியை இதுவரை 10,000 க்கும் அதிகமானோர் பார்த்தது கிடையாது.
விராட் கோலியின் வருகையால் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, துணை ராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
அதிக ரசிகர்கள் வருகையால், முதலில் கௌதம் கம்பீர் ஸ்டாண்ட் 6000 இருக்கைகள் திறந்துவிடப்பட்டன. அதிகளவிலான ரசிகர்களின் வருகையால் கிஷம் பேடி ஸ்டாண்டில் உள்ள 14,000 இருக்கைகளும் திறந்துவிடப்பட்டன.
இதுபற்றி தில்லி கிரிக்கெட் சங்க செயலர் அசோக் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “தில்லி கிரிக்கெட் சங்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளேன். ஆனால், இதுபோன்ற காட்சிகளைப் பார்த்தது இல்லை. இது விராட் கோலியின் புகழ் ஈடு இணையற்றது என்பதையேக் காட்டுகிறது. முதலில் கௌதம் கம்பீர் ஸ்டாண்டை திறந்ததும் கூட்டம் அதிகரித்தது. இதனால், கிஷன் பேடி ஸ்டாண்டையும் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டாஸ் போடும் போதே 12,000 ரசிகர்கள் கூடிவிட்டனர்” என்றார்.
இளம் வீரர்களும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி ஃபீல்டிங்கில் களமிறங்கியதும் ரசிகர் “கோலி... கோலி...” எனக் கத்தி உற்சாகப்படுத்தினர். மேலும், மதிய நேர நிலவரப்படி சுமார் 27,000க்கும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருண் ஜேட்லி மைதானம் 48,000 இருக்கைகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய்..! இருளன் படத்தின் போஸ்டர்!

ஓடிடியில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய டாப் 10 படங்கள்!

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்!

ஓடிடியில் காணக் கிடைக்கும் மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



