
ஸ்டீவ் ஸ்மித்துடன் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவதாக கவாஜா கூறியுள்ளார்.
38 வயதாகும் கவாஜா இலங்கை உடனான முதல் டெஸ்ட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 232 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களில் ஆட்டமிழந்தார். அத்துடன் நேற்றே டெஸ்ட் கிரிக்கெட்டில் 10, 000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.
இதற்கு வாழ்த்து தெரிவித்து பேசிய உஸ்மான் கவாஜா ஸ்மித்த தனது சிறுவயதில் இருந்தே தெரியும் எனக் கூறியுள்ளார்.
கவாஜா கூறியதாவது:
10,000 ரன்கள் அடிப்பது மிகவும் சிறப்பானது. ஸ்மித்துக்கு 16 வயதிருக்கும்போதே எனக்கு அவரைத் தெரியும். அவருக்கு எதிராக நான் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருக்கிறேன். பிறகு வளர்ந்து நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக விளையாடினோம்.
ஆஸ்திரேலிய அணிக்காகவும் நீண்ட ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். உங்களுக்குத் தெரியுமா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடன் அதிகமாக விளையாடியது நான் மட்டுமே. நாங்கள் சிறந்த நண்பர்கள்.
சிறுவர்களாகத் தொடங்கி தற்போது ஆடவர்களாகி இருக்கிறோம். இதை நினைக்கும்போது சிரிப்பாக இருக்கிறது. அதேசமயம் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கிறது.
சிட்னியிலேயே ஸ்மித் தனது 10,000 ரன்களை அடிக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், நான் அங்கு விரைவிலேயே ஆட்டமிழந்துகொண்டிருந்தேன். தற்போது இங்கு அவருடன் இருந்தது நல்ல விஷயம். இன்னும் நாங்கள் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.