உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் கடந்த ஜூன் 11-இல் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென்று கோப்பையை வென்றது.
இந்தப் போட்டி இந்திய அணி விளையாடாமலேயே இந்தியாவில் அதிகமான பார்வைகளைப் பெற்ற டெஸ்ட் போட்டியாக மாறியுள்ளது.
இந்தியாவில் இந்தப் போட்டியை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் 2.94 பில்லியன் (294 கோடி) நிமிடப் பார்வைகள் தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 47 மில்லியன் சென்றடைந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் கடந்த 2023-இல் இந்தியா- ஆஸி. அணி மோதிய போட்டி 225 மில்லியன் டிஜிட்டல் பார்வைகளைக் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2023-இல் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி 2025-இல் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது. இந்தப் போட்டியை நேரில் பார்க்க 1,09,227 பேர் சென்றிருந்தனர்.
கறுப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா ஐசிசி கோப்பையை அந்த அணிக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுத்தந்துள்ளார்.
அந்தப் போட்டியில் எய்டன் மார்க்ரம் ஆட்ட நாயகனாக விருது பெற்றார். ககிசோ ரபாடா 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.