உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் வீரர்... ஜடேஜா படைத்த புதிய சாதனை!

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்திய சாதனைகள் குறித்து...
India's Ravindra Jadeja celebrates after scoring fifty runs on day two of the second cricket test match between England and India at Edgbaston
அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஜடேஜா... படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலமாக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 587-க்கு ஆல் அவுட்டானது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து அணி 2-ஆம் நாள் முடிவில் 77/3 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா 89 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், ஜடேஜா தனது 23-ஆவது அரைசதத்தை நிறைவு செய்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2,000-க்கும் அதிகமான ரன்கள் மற்றும் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்றை ஜடேஜா நிகழ்த்தியுள்ளார்.

ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செனா நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நம்.7 அல்லது அதற்குக் கீழ் வரிசையில் இறங்கி அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் கபில்தேவை சமன்செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் தோனி 10 அரைசதத்துடன் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian player Ravindra Jadeja has achieved many records by scoring a half-century in the match against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com