ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!

பும்ராவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை..! வசனத்தை மாற்ற சிராஜுக்கு அர்ஷ்தீப் வேண்டுகோள்!

பந்துவீச்சில் அசத்திய சிராஜுக்கு அர்ஷ்தீப் கூறிய நெகிழ்ச்சியான வசனம் குறித்து...

Arshdeep Asks Siraj To Change Dialogue: 'I Only Believe In Myself And Jassi Bhai

சிராஜுவிடம் வசனத்தை மாற்றும்படி கூறிய அர்ஷ்தீப். - படம்: பிசிசிஐ

Updated On :

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அசத்திய முகமது சிராஜுக்கு அர்ஷ்தீப் வழங்கிய பாராட்டு நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

இந்திய அணியில் பும்ரா முக்கியமான பந்துவீச்சாளர். கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பும்ரா குறித்து சிராஜ், “நான் ஜஸ்ஸி பாயை மட்டுமே நம்புகிறேன். ஏனெனில் அவர் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரே வீரர் அவர் மட்டுமே” என தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் பேசியது வைரலானது.

(ஐ ஒன்லி பிளிவ் ஆன் ஜஸ்ஸி பாய், பிகாஸ் ஹீ இஸ் கேம் சேஞ்சர் பிளேயர் ஹீ இஸ், ஒன்லி ஒன் காய் ஜஸ்பிரீத் பும்ரா - சிராஜ் பேசியது).

தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா இல்லாமல் சிராஜ் அசத்தியதால் அந்த வசனத்தை மாற்றும்படி சிராஜிடம் அர்ஷ்தீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வசனத்தை மாற்றுங்கள் சிராஜ் - அர்ஷ்தீப் புகழாரம்

டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் முடிவுக்குப் பிறகு சிராஜ் பிசிசிஐ நேர்காணலில் பேசிக்கொண்டிருந்தபோது அர்ஷ்தீப் அருகே வந்து, “திட்டங்கள் மாறிவிட்டன. நீங்கள் வசனத்தை மாற்றுங்கள் சிராஜ். ’இனிமேல் நான் என்னையும் பும்ராவையும் நம்புவேன்’ என மாற்றுங்கள்” என்றார்.

இது சிராஜிக்கு மிகப்பெரிய கௌரமாகக் கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த விடியோவும் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலமாக ஃபாலோ-ஆனை தவிா்த்த அந்த அணி, தற்போது 180 ரன்கள் பின்தங்கியுள்ளது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்தின் பேட்டர்களை ஆகாஷ் தீப், சிராஜ் கூட்டணி வீழ்த்தினார்கள்.

குறிப்பாக இந்தப் போட்டியில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Summary

The dialogue has been changed! Mohammed Siraj's famous one-liner is now, 'I Only Believe In Myself And Jassi Bhai', thanks to fellow pacer Arshdeep Singh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.