12/2: 2-ஆவது இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸி.யை மே.இ.தீ. அணி வீழ்த்துமா?

இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் தடுமாறும் ஆஸி. அணி குறித்து...
West Indies' Jayden Seales celebrates after bowling Australia's Sam Konstas for a duck on day two of the second cricket Test match
டக் அவுட்டாகி வெளியேறும் கான்ஸ்டாஸ். கொண்டாடும் மே.இ.தீ.வீரர்கள். Ricardo Mazalan
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது.

முதல் டெஸ்ட்டில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட்டில் சுமாராகவே விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாக மேற்கிந்தியத் தீவுகள் அணி 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பிரண்டன் கிங் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுக்க, ஆசி. சார்பில் லயன் 3, கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி. அணி 12 ரன்களுக்கே தொடக்க வீரர்கள் இருவரது விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜெய்டென் சீல்ஸ் வீசிய அபாரமான பந்துவீச்சில் ஆஸி.யின் தொடக்க வீரட் சாம் கான்ஸ்டாஸ் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆக, மற்றுமொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாகா 2 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.

குறைந்த ஓவரே இருந்ததால் அடுத்ததாக ஸ்மித்துக்குப் பதிலாக நாதன் லயன் களமிறங்கினார்.

இரண்டாம் நாள் முடிவில் ஆஸி. அணி 6 ஓவர்களில் 12 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. களத்தில் நாதன் லயன் 2*, கேமரூன் கிரீன் 6* ரன்களுடனும் இருக்கிறார்கள்.

இந்த நல்வாய்ப்பை மே.இ.தீ. அணி பயன்படுத்தி ஆஸி.யை வீழ்த்துமா என்பதை ’மூவிங் டே’ எனப்படும் இந்த மூன்றாம் நாளே முடிவு செய்யும்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் இந்தப் போட்டியை இந்தியாவில் இருப்பவர்கள் ஃபேன்கோடு செயலி, அதன் இணையதளத்தில் நேரலையாகப் பார்க்கலாம்.

Summary

The Australian team is struggling in the second innings of the 2nd Test against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com