பகலிரவு டெஸ்ட்டில் வரலாறு படைத்த ஸ்காட் போலண்ட்!

ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் நிகழ்த்திய சாதனை குறித்து...
Teammates surround Australia's Scott Boland after he took the wicket of West Indies' Jomel Warrican to complete a hat tric
ஸ்காட் போலண்ட்டை பாராட்டும் சக ஆஸி. வீரர்கள். (நடுவில் போலண்ட்)படம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் பகலிரவு டெஸ்ட்டில் முதல்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆஸ்திரேலியாவின் எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்தில் நடைபெற்றது.

ஜமைக்காவில் நடந்த இந்தப் போட்டியில் ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 225க்கு ஆட்டமிழக்க, மே.இ.தீ. அணி 143க்கு ஆட்டமிழந்தது.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 121க்கு ஆட்டமிழக்க, மே.இ.தீ. அணி வெற்றிபெற 210 ரன்கள் தேவையாக இருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மே.இ.தீ. அணி 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில்தான் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியர்களில் டெஸ்ட்டில் ஹாட்ரிக் எடுத்தவர்களில் 10-ஆவது வீரராக போலண்ட் இணைந்துள்ளார். கடைசியாக 2010-11 தொடரில் பீட்டர் சிடில் எடுத்திருந்தார்.

உலக அளவில், பிங்க் பந்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.

பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போலண்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Summary

Aussie fast bowler Scott Boland created history by taking the first hat-trick of wickets in a day-night Test.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com