ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்; மீதமிருப்பது சச்சின் மட்டும்தான்!

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
joe root celebrates after scoring century
சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஜோ ரூட்படம் | AP
Published on
Updated on
1 min read

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பந்த் 54 ரன்களும் எடுத்தனர். கே.எல்.ராகுல் 46 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியம் டாஸன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஸாக் கிராலி 84 ரன்களும், பென் டக்கெட் 94 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து, ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஆலி போப் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அவரது 38-வது சதத்தைப் பதிவு செய்தார்.

சதம் விளாசி அசத்திய ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார். முன்னதாக, அவர் ஜாக் காலிஸ் மற்றும் ராகுல் டிராவிட்டின் அதிக ரன்கள் சாதனையை முறியடித்தார். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே மீதமிருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் - 15,921 ரன்கள்

ஜோ ரூட் - 13,379* ரன்கள்

ரிக்கி பாண்டிங் - 13,378 ரன்கள்

ஜாக் காலிஸ் - 13,289 ரன்கள்

ராகுல் டிராவிட் - 13,288 ரன்கள்

இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களைக் கடந்து வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

England batsman Joe Root has broken former Australian captain Ricky Ponting's record of scoring the most runs in Test matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com