
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் க்ளென் மேக்ஸ்வெல் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
36 வயதாகும் க்ளென் மேக்ஸ்வெல் தனது அதிரடியான பேட்டிங்கிற்காக புகழ்ப்பெற்றவர்.
ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சேஸிங்கில் யாரும் நம்பமுடியாத அளவுக்கு காலில் காயம் ஏற்பட்டும் ஒற்றைக் காலில் ஆடினார்.
அந்தப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். பின்னர், சுமாரான ஃபார்மில் இருந்தார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு, ஒருநாள் போட்டிகளில் இருந்து மேக்ஸ்வெல் விலகினார்.
தற்போது, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
தொடக்க வீரராக விளையாடி வரும் மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் நன்றாக விளையாடியும் ரன் அவுட்டானார்.
இந்நிலையில், 4-ஆவது போட்டியில் 18 பந்தில் 47 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஃபீல்டிங்கில் சிறப்பான கேட்ச் பிடித்தார். எல்லைக் கோட்டியில் அற்புதமாக பிடித்து பந்தை தூக்கிவீச அதை கேமரூன் கிரீன் பிடித்து அசத்தினார்.
இந்த மாதிரியான கேட்ச்களுக்காக தான் அதிகமாக பயிற்சி எடுப்பதாகக் கூறியுள்ளார்.
பேட்டிங், ஃபீல்டிங் என மேக்ஸ்வெல் ஃபார்முக்கு திரும்பியது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.