டாஸில் 15-0 தோல்வி... இந்திய கேப்டன் கூறியதென்ன?

தொடர்ச்சியாக டாஸில் தோல்வியுறும் இந்திய அணி குறித்து...
Shubman Gill scripts history with highest Test score by an Indian in England
ஷுப்மன் கில். படம்: ஐஏஎன்எஸ்
Published on
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 15 முறை டாஸில் தோல்வியடைந்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூலை 31) துவங்கியது.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிறிது நேரம் மழை பெய்ந்ததால் போட்டி தாமதமானது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் டாஸ் வென்றதும் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.

இந்தத் தொடரில் 2-1 இங்கிலாந்து முன்னிலை வகிக்க, இந்தப் போட்டியில் இந்தியா வென்று சமனில் முடிக்க முனைப்பில் இருக்கிறது.

தொடர்ச்சியாக டாஸில் தோற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியதாவது:

அதிகமாக சிந்தித்தேன்

நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம்.

நேற்று பிளேயிங் லெவன் குறித்து அதிகமாக சிந்தித்தேன். மேகமூட்டமாக இருப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமென நினைக்கிறேன்.

முதல் இன்னிங்ஸில் ரன்கள் குவிக்க நினைக்கிறோம். அணியில் 3 மாற்றங்களை செய்திருக்கிறோம். ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர், பும்ராவுக்குப் பதிலாக ஜுரெல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

விளையாடும் எல்லா போட்டிகளையும் வெல்ல நினைக்கிறோம். அருகில் வருகிறோம். இன்னும் 5-10 சதவிகிதம் கூடுதலாக உழைத்தால் வெற்றி பெறுவோம். அதை வீரர்கள் அளிப்பார்கள் என்றார்.

Summary

The Indian team has lost 15 consecutive Test matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com