உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு என்பதைப் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டி நாளை(ஜூன் 11) இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவிருக்கின்றன.
கடந்த இரண்டு தொடர்களிலும் இரண்டாமிடம் பிடித்த இந்திய அணி, இந்தத் தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் ஆகிய தொடர்களால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால், மூன்றாம் இடம் பிடித்தது.
முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு 36 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படவிருக்கின்றன. இது இந்திய மதிப்பில் ரூ. 30 கோடியாகும். அதேபோன்று இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 21 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 18 கோடி) கிடைக்கும். இது கடந்தாண்டைவிட 16 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதிகமாகும்.
மூன்றாமிடம் பிடித்த இந்திய அணிக்கு 14.40 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைக்கும். இது இந்திய மதிப்பில் ரூ.12.32 கோடியாகும்.
மற்ற அணிகளுக்கான பரிசுத் தொகை விவரம்
முதல் பரிசு - 36 லட்சம் டாலர்கள்
2-வது பரிசு - 21 லட்சம் டாலர்கள்
3-வது இடம் - இந்தியா (14.40 லட்சம் டாலர்கள்)
4-வது இடம் - நியூசிலாந்து (10 லட்சம் டாலர்கள்)
5-வது இடம் - இங்கிலாந்து (9, 60,000 டாலர்கள்)
6-வது இடம் - இலங்கை (8,40,000 டாலர்கள்)
7-வது இடம் - வங்கதேசம் (7,20,000 டாலர்கள்)
8-வது இடம் - மேற்கிந்திய தீவுகள் (6,00,00 டாலர்கள்)
9-வது இடம் - பாகிஸ்தான் (4,80,000 டாலர்கள்)
இதையும் படிக்க: பெண் நடுவருடன் வாக்குவாதம்: அஸ்வினுக்கு அபராதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; தொடரை முழுமையாக் கைப்பற்றுமா?

முதல் டி20: இந்தியா பந்துவீச்சு; ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
இந்திய மகளிா் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த தருணம்: பிசிசிஐ

லார்ட்ஸ் டெஸ்ட்: 270 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



