South Africa's David Bedingham bats on day two of the World Test Championship final between South Africa and Australia at Lord's cricket ground in London
டேவிட் பெடிங்ஹாம்படம்: ஏபி

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் ஆட்டம் குறித்து...
Published on

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது.

லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடிவில் தெ.ஆ. 43/4 ரன்கள் எடுத்திருந்தது.

2ஆம் நாளில் சிறப்பாக தொடங்கிய தெ.ஆ. அணியின் கேப்டன் டெம்பா பவுமா ஸ்டார் வீசிய ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.

கடைசியாக பவுமா 36 ரன்களுக்கு பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டேவிட் பெடிங்ஹாம் 95 பந்துகளில் 39 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது, உணவு இடைவேளை வரை தெ.ஆ. 121க்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

களத்தில் பெடிங்ஹாம் உடன் கைல் வெர்ரெய்ன் 11 ரன்களுடன் இருக்கிறார். 91 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ள தெ.ஆ.வுக்கு இன்றைய நாள் மிகவும் முக்கியமானது.

பெடிங்ஹாம் இங்கிலாந்தில் 58 முதல் தர போட்டிகளில் 4,463 ரன்கள் குவித்துள்ளார். இந்த அனுபவத்தை வைத்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com