நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

டேவிட் வார்னரின் இடத்துக்கு மாற்று வீரர் இல்லை; முன்னாள் ஆஸி. கேப்டன் அதிருப்தி!

டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரது இடத்துக்கு சரியான மாற்று வீரரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

News image

டேவிட் வார்னர் (கோப்புப் படம்)

Updated On :15 ஜூன் 2025, 6:51 pm IST

டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரது இடத்துக்கு சரியான மாற்று வீரரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணிக்கான தொடக்க ஆட்டக்காரருக்கான தேடலில் இறங்கியது. இருப்பினும், இன்று வரை ஆஸ்திரேலிய அணியால் டேவிட் வார்னருக்கு மாற்று வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறலாம்.

டேவிட் வார்னருக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித், சாம் கான்ஸ்டாஸ் மற்றும் நாதன் மெக்ஸ்வீனி போன்ற வீரர்கள் முயற்சி செய்யப்பட்டனர். இந்த முயற்சி பெரிதாக கைகொடுக்கவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும், அவரால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன் மற்றும் கேமரூன் கிரீன் மூவரும் இணைந்து இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அவர்களால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாதது தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் கேப்டன் அதிருப்தி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூன் 25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க மாற்று வீரர் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், சாம் கான்ஸ்டாஸுக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பளிக்காதது குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்று வரை நம்மால் அவருடைய இடத்துக்கான மாற்று வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேர்மையாக கூறவேண்டுமென்றால், தொடக்க ஆட்டக்காரருக்கானத் தேடலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இறங்கவில்லை என்றே கூறுவேன்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சாம் கான்ஸ்டாஸ் தொடக்க ஆட்டக்காரராக நன்றாக விளையாடி அரைசதம் எடுத்தபோதிலும், இலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாம் கான்ஸ்டாஸை மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.