உதவிப் பயிற்சியாளரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

பாகிஸ்தான் அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அஸார் மஹ்முத், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Former all-rounder Azhar Mahmood was on Monday elevated to the post of Pakistan's acting red-ball head coach
அஸார் மஹ்முத்படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அஸார் மஹ்முத், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக ஜேசன் கில்லெஸ்பி மற்றும் கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டபோது, பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அஸார் மஹ்முத் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் நிறைவடையும் முன்பே, கேரி கிறிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி இருவரும் அவர்களது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினர்.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அஸார் மஹ்முத் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இந்த பொறுப்பில் அவர் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அஸார் மஹ்முத் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பதவிக்காலம் முடியும் வரை தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர்வார். அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளதால், பாகிஸ்தான் அணி குறித்து அவருக்கு நன்றாக தெரியும். அவருடைய பரந்த அனுபவம் பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதாகும் அஸார் மஹ்முத் பாகிஸ்தான் அணிக்காக 21 டெஸ்ட் மற்றும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Former all-rounder Azhar Mahmood was on Monday elevated to the post of Pakistan's acting red-ball head coach until the conclusion of his current contract, which runs until April next year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com