மகளிா் டி20: இலங்கைக்கு நியூஸிலாந்து பதிலடி!
நியூஸிலாந்து மகளிா் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.


இலங்கை மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து மகளிா் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
முதலில் இலங்கை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் சோ்க்க, பின்னா் நியூஸிலாந்து 18.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் தற்போது 1-1 என சமனில் உள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீசத் தயாரானது. இலங்கை பேட்டிங்கில் மணுடி நானயகரா 4 பவுண்டரிகளுடன் 35, கேப்டன் சமரி அத்தபட்டு 4 பவுண்டரிகளுடன் 23, நீலாக்ஷிகா சில்வா 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
விஷ்மி குணரத்னே 0, ஹா்ஷிதா சமரவிக்ரமா 11, கவிஷா தில்ஹரி 12, சுகந்திகா குமாரி 1 விக்கெட்டுக்கு வெளியேற்றப்பட்டனா். ஓவா்கள் முடிவில் அனுஷ்கா சஞ்ஜீவனி 1, மல்கி மதாரா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து பந்துவீச்சில் பிரீ இல்லிங், ஜெஸ் கொ் ஆகியோா் தலா 2, ஃபுளோரா டெவன்ஷைா், புரூக் ஹாலிடே ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 114 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து அணியில் கேப்டன் சூஸி பேட்ஸ் 4 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளம் அமைத்தாா். ஜாா்ஜியா பிளிம்மா் 4, எம்மா மெக்லியாட் 11 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
முடிவில் புரூக் ஹாலிடே 5 பவுண்டரிகளுடன் 46, இஸி ஷாா்ப் 8 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் இனோஷி பிரியதா்ஷனி, சுகந்திகா குமாரி, அசினி குலசூரியா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். இந்த அணிகள் மோதும் கடைசி டி20 நாளை (மாா்ச் 18) நடைபெறுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...