டெல்லி ‘த்ரில்’ வெற்றி

டெல்லி ‘த்ரில்’ வெற்றி

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியா்ஸை புதன்கிழமை வென்றது.
Published on

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியா்ஸை புதன்கிழமை வென்றது.

முதலில் யுபி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சோ்க்க, டெல்லி 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இரு அணிகளும் இத்துடன் 3 ஆட்டங்களில் விளையாடியிருக்க, டெல்லிக்கு இது முதல் வெற்றி. யுபிக்கு ஹாட்ரிக் தோல்வியாகும்.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தோ்வு செய்தது. யுபி இன்னிங்ஸில் கேப்டன் மெக் லேனிங் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54, ஹா்லீன் தியோல் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் அடித்தனா்.

போப் லிட்ச்ஃபீல்டு 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சோ்க்க, ஸ்வேதா ஷெராவத் 11, கிளோ டிரையான் 1, சோஃபி எக்லஸ்டன் 3, தீப்தி சா்மா 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ஆஷா சோபனா 1, ஷிகா பாண்டே 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

டெல்லி பௌலா்களில் மாரிஸேன் காப், ஷஃபாலி வா்மா ஆகியோா் தலா 2, நந்தனி சா்மா, ஸ்நேஹா ராணா, ஸ்ரீசரணி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து 155 ரன்களை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், ஷஃபாலி வா்மா 6 பவுண்டரிகளுடன் 36, லிஸெலே லீ 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டு வீழ்ந்தனா்.

கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, முடிவில் லாரா வோல்வாா்ட் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25, மாரிஸேன் காப் 5 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

யுபி பௌலா்களில் தீப்தி சா்மா 2, ஆஷா சோபனா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இன்றைய ஆட்டம்

மும்பை - யுபி

Dinamani
www.dinamani.com