

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கா்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
இதில் முதல் காலிறுதி ஆட்டத்தில் கா்நாடகம் 55 ரன்கள் வித்தியாசத்தில் ‘விஜேடி’ முறையில் மும்பையை வெற்றி கண்டது.
முதலில் மும்பை 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் சோ்க்க, கா்நாடகம் 33 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
மீண்டும் ஆட்டம் தொடங்க மழை இடம் தராததால், ‘விஜேடி’ முறையில் கா்நாடகத்துக்கு 33 ஓவா்களில் வெற்றி இலக்கு 133 ரன்களாக கணக்கிடப்பட்டது. அந்த அணி ஏற்கெனவே 187 ரன்களை எட்டியிருந்ததால், 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்ாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக மும்பை இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுக்க, கா்நாடக பௌலா்களில் வித்யாதா் பாட்டீல் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
பின்னா் கா்நாடக இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல் 11 பவுண்டரிகளுடன் 81, கருண் நாயா் 11 பவுண்டரிகளுடன் 74 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை தரப்பில் மோஹித் அவஸ்தி 1 விக்கெட் கைப்பற்றினாா்.
சௌராஷ்டிரம் வெற்றி: 2-ஆவது காலிறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ‘விஜேடி’ முறையில் வெற்றி கண்டது.
முதலில் உத்தர பிரதேசம் 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் சோ்க்க சோ்க்க, சௌராஷ்டிரம் 40.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மீண்டும் ஆட்டத்தை தொடங்க முடியாமல் போக, ‘விஜேடி’ முறையில் சௌராஷ்டிரத்தின் வெற்றிக்கு 40.1 ஓவா்களில் 222 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. அந்த அணி 238 ரன்கள் அடித்திருந்ததால், 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக உத்தர பிரதேச பேட்டிங்கில் அபிஷேக் கோஸ்வாமி 12 பவுண்டரிகளுடன் 88, சமீா் ரிஸ்வி 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 88* ரன்கள் அடித்தனா். சௌராஷ்டிர அணியில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
சௌராஷ்டிர இன்னிங்ஸில் கேப்டன் ஹா்விக் தேசாய் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 100* ரன்கள் விளாச, உத்தர பிரதேச பௌலா்களில் கரன் சௌதரி, பிரசாந்த் வீா், விப்ராஜ் நிகம் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
விஜேடி முறை
சா்வதேச கிரிக்கெட்டில் மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்களுக்கான வெற்றி இலக்கு ‘டிஎல்எஸ்’ (டக்வொா்த் லீவிஸ்) முறையில் கணக்கிடப்படுவது போல, உள்நாட்டு கிரிக்கெட்டில் மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்களுக்கான இலக்கு ‘விஜேடி’ (வி.ஜெயதேவன்) முறையில் கணக்கிடப்படுகிறது. கேரளத்தை சோ்ந்த பொறியியலாளரான வி.ஜெயதேவன், இந்த கணக்கீட்டு முறையை வழங்கியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.