அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடர்: 5 போட்டிகள் அல்ல; 3 போட்டிகளாக குறைப்பு!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.

படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மே 25 முதல் ஜூன் 3 வரையிலான இடைவெளியில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதாக இருந்தது. தற்போது, இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் 3 போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் ஒன்றாக இணைந்து டி20 தொடரின் அட்டவணையில் மாற்றம் செய்துள்ளன. தொடரின் மூன்று போட்டிகளையும் லாகூரிலுள்ள கடாஃபி திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டிகள் நடைபெறும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அந்த தொடரின் இறுதிப்போட்டி வருகிற மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், பாகிஸ்தான் - வங்கதேசத்துக்கு இடையிலான டி20 தொடருக்கான அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கதேசம் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.