கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் சாம்பியன்

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரை பாகிஸ்தான் வென்று அசத்தியுள்ளது.

News image
- AP
Updated On :29 நவம்பர் 2025, 4:29 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரை பாகிஸ்தான் வென்று அசத்தியுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று (நவம்பர் 29) ராவல்பிண்டியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் கமில் மிஷாராவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

சிறப்பாக விளையாடிய அவர் 47 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபர்ஹான், சயீம் அயூப் களம்கண்டனர்.

ஃபர்ஹான் 23, சயீம் அயூப் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் சல்மான் அலி அகா 14 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய பாபர் அசாம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். அவர் 34 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

summary

Pakistan bowlers were key as the hosts defeat Sri Lanka in the tri-series final by six wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.