ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசி வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசி இந்திய வீரர் ரோஹித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று (நவம்பர் 30) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரேநெலான் சுப்ராயன் ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
வரலாறு படைத்த ரோஹித் சர்மா
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசி ரோஹித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.
இதுவரை 278 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 352 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். முன்னதாக, 398 போட்டிகளில் 351 சிக்ஸர்களுடன் இந்த சாதனையை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தன்வசம் வைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள்
ரோஹித் சர்மா - 352* சிக்ஸர்கள்
ஷாகித் அஃப்ரிடி - 351 சிக்ஸர்கள்
கிறிஸ் கெயில் - 331 சிக்ஸர்கள்
சனத் ஜெயசூர்யா - 270 சிக்ஸர்கள்
எம்.எஸ்.தோனி - 229 சிக்ஸர்கள்
Indian batsman Rohit Sharma has created history by hitting the most sixes in ODIs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

