
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் சோபனா மொஸ்டாரி சிறப்பாக விளையாடி 80 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். 66 ரன்கள் எடுத்ததன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த முதல் வங்கதேச வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.
அவரைத் தொடர்ந்து, ரூபியா ஹைதர் 44 ரன்களும், ஷர்மின் அக்தர் 19 ரன்களும் எடுத்தனர். கேப்டன் நிகர் சுல்தானா 12 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஆஷ்லே கார்டனர், அன்னாபெல் சதர்லேண்ட், அலானா கிங் மற்றும் ஜியார்ஜியா வேர்ஹம் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேகன் ஷுட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
இதையும் படிக்க: ஐசிசி விருதினை வென்ற அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.