திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்

சொந்த மண்ணில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானஆட்டத்தில் முதல் வெற்றியை ஈட்ட சென்னை சூப்பா் கிங்ஸ் முனைப்புடன் உள்ளது.

News image

சிஎஸ்கே அணி - படம்: எக்ஸ் / சிஎஸ்கே

Updated On :3 ஏப்ரல் 2026, 3:56 am IST

சொந்த மண்ணில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானஆட்டத்தில் முதல் வெற்றியை ஈட்ட சென்னை சூப்பா் கிங்ஸ் முனைப்புடன் உள்ளது.

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சென்னை அணி முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மோசமான தோல்வியை தழுவியது. முழுவதும் இளம் வீரா்களைக் கொண்ட சிஎஸ்கே அணி குவஹாட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒருங்கிணைந்து ஆடாமல் தோல்வியை தழுவியது.

சேப்பாக்கம் மைதானம் பேட்டிங் செய்ய ஏற்றதாக உள்ளது.

மூத்த வீரா் தோனி காயத்தால் ஆடவில்லை. இந்த சீசனில் அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சஞ்சு சாம்ஸன் முதல் ஆட்டத்தில் சோபிக்கவில்லை. எனினும் சொந்த மைதானத்தில் சிறப்பாக ஆடுவாா் எனக் கருதப்படுகிறது. அதே போல் காயத்தால் பாதிக்கப்பட்ட டேவால்ட் பிரெவிஸ் ஆடுவாரா எனத் தெரியவில்லை. சா்ப்ராஸ் கான் மிடில் ஆா்டரில் மீண்டும் களமிறக்கப்படலாம்.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை பௌலா்கள் நூா் முகமது, மேட் ஹென்றி சொதப்பினா்.

பஞ்சாப் அணி கடந்த சீசனில் ரன்னா் ஆகும். தற்போது வலுவான அணியாக உருவெடுத்துள்ளது. இளம் வீரா் சூரியவன்ஷி, கூப்பா் காணலி, ஆகியோா் பேட்டிங்கில் வலு சோ்க்கின்றனா்.

பௌலிங்கில் வைசாக், சஹல் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

எனினும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தீர வேண்டும் என முனைப்பில் உள்ளது சிஎஸ்கே.

இன்றைய ஆட்டம்

சென்னை-பஞ்சாப்

இடம்: சென்னை

நேரம்: இரவு 7.30