ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
வருண் சக்கரவர்த்தி, கார்த்திக் தியாகி அசத்தல்!
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஷிம்ரன் ஹெட்மேயர் 15 ரன்கள், கேப்டன் ரியான் பராக் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
ரிங்கு சிங் அசத்தல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு முதல் வெற்றி!
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே மற்றும் டிம் செய்ஃபெர்ட் இருவரும் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின், சிறிது அதிரடி காட்டிய கேமரூன் கிரீன் 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அங்க்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் ரமன்தீப் சிங் தலா 10 ரன்களும், ரோவ்மன் பௌவல் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 85 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ரிங்கு சிங் மற்றும் அனுகுல் ராய் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் 34 பந்துகளில் 53 ரன்களும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) , அனுகுல் ராய் 16 பந்துகளில் 29 ரன்களும் (ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 3 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஃப்ரா ஆர்ச்சர், நண்ட்ரே பர்கர், ரவி பிஷ்னோய் மற்றும் யஷ் ராஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திலிருந்த கேகேஆர் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
Summary
In the IPL series, Kolkata Knight Riders defeated Rajasthan Royals by 4 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஃபின் ஆலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 248 ரன்கள் இலக்கு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

வருண் சக்ரவர்த்தி, கார்த்திக் தியாகி அபாரம்; கொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


